55 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பாஜக முன்னாள் MLA ராஜேஷ் மிஸ்ரா சட்டம் படிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்…

105
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தியது.

இதில், 55 வயதான முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா 263 மதிப்பெண்கள் எடுத்து தனிகவனம் பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சட்டத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளேன் என்றும் நல்ல வழக்கறிஞரின் சேவையைப் பெற முடியாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை உணர்ந்ததால் இந்த முடிவு எடுத்தேன் எனவும் கூறினார்.