எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

261
etharkum thuninthavan
Advertisement

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்தியராஜ், சூரி, புகழ், சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா ஊருக்கும் வினய் ஊருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. வினய் பக்கத்து ஊர் பெண்களை ஆபாசமாக படம் எடுப்பது என படு மோசமான காரியங்களை செய்கிறார்.

இறுதியில் வினய்க்கு சூர்யா தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

தேவதர்ஷனி, சூரி, புகழ் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ துணிச்சலான வெற்றி.