‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
அஜித்தை பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது, “அஜித் மிகவும் அடக்கமான நடிகர். ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.” ‘வலிமை’ படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது.
’வலிமை’ ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.