கூகுளிலும் புளூ டிக் அம்சம் வரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன…

149
Advertisement

டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, கூகுளும் அதன் பயனாளர்களுக்கு புளூ டிக் அம்சத்தை கொண்டுவர உள்ளது.

இதன் வாயிலாக மக்கள் சரியான பயனரிடம் இருந்து மின்னஞ்சலை பெறுகிறார்களா என்பதை அடையாளம் காண இயலும் என்று கூறப்படுகிறது. மக்கள் இதன் மூலம் மோசடியில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்றும், Google Workspace, G Suite Basic மற்றும் Business-ன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இச்சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.