Time Bomb பத்தி கேள்விப்பட்டிருக்கிங்களா?

64
Advertisement

Time Bomb பத்தி எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம். At least சினிமாவுலயாவது கண்டிப்பா பாத்திருப்போம். அதுல குறிக்கப்பட்ட நேரம் குறைஞ்சுட்டே வந்து 0 எண்ணை, கருவி அடையும் போது வெடிச்சுடும். அதே மாதிரி நம்ம ஒட்டுமொத்த உலகத்துக்கும் கடைசி நேரத்தை குறிச்சு வச்சு இருக்க TIme Bomb பத்தி தெரியுமா? உலகம் அழியப் போற நாளை சுட்டிக்காட்டும் Doomsday Clockன்னா என்ன? இன்னும் உலகம் அழிய 90 நொடிகள் மட்டுமே இருக்குன்னு சொல்லப்படுற குறியீட்டை எப்படி புரிஞ்சுக்கணும்? வாங்க விரிவா பாக்கலாம்.

1947ஆம் ஆண்டு நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்ச வருஷம்ன்னு எல்லாருக்குமே நல்லா நியாபகம் இருக்கும். ஆனா, முதல் இரண்டு உலகப்போர்கள் நடந்து முடிஞ்ச அதிர்வலைகள் இன்னுமே ஓயாத காலம்  அது. அணு ஆயுத பாதிப்புகள், ஆதிக்க நாடுகளுக்கு எதிரான சமூகப் பார்வைகள், தனி மனிதனுக்கான உரிமைகள், நாடுகளுக்கான சுதந்திரம் போன்ற ஆழமான கருத்தியல்கள் அழுத்தமா விவாதிக்கப்பட்ட சமயம்.

அதுலயும் குறிப்பா, விஷயம் தெரிஞ்ச விஞ்ஞானிகளை ரொம்பவே பதற வச்சது சோவியத் யூனியன் நாடுகள் உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற நாடுகள் அணு ஆயுத ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தான். அணு ஆயுத தாக்குதல்னால அழியப் போறது எதிரி நாடுகள் மட்டும் இல்ல, உலகம் முழுசும் தான் மக்களுக்கு புரிய வைக்க நினைச்சாங்க Bulletin Of the Atomic Scientists பத்திரிகையை நடத்தி வந்த விஞ்ஞானிகள். இந்த முயற்சியின் பலனனாக உருவாக்கப்பட்டது தான் Doomsday Clock.

அணு ஆயுதப்போர், புவி வெப்பமயமாதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அப்படின்ற இந்த மூணு விஷயங்கள்னால எப்பல்லாம் மனித இனத்துக்கு ஆபத்து ஏற்படுற மாதிரியான சூழல் உருவாகும் போதெல்லாம், அப்பல்லாம் நள்ளிரவை நோக்கி Doomsday Clockஓட முள் நகர்த்தப்படும். இந்த முள் எப்ப நள்ளிரவை தொடுதோ அப்ப தான் உலகம் அழியும் என்பதை குறியீடு வாயிலான எச்சரிக்கையா Doomsday Clock பல ஆண்டுகளா செஞ்சுட்டு வருது.

Doomsday Clock உருவாக்கப்படுத்தில இருந்தே அணு ஆயுதங்களின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரிச்சு இருந்ததால, இந்த கடிகாரத்தோட நேரம் எப்பவும் நள்ளிரவை நெருங்கியே அமைஞ்சது. சர்வதேச அளவுல நடக்குற பல்வேறு நிகழ்வுகளோடு அடிப்படையில, Doomsday Clockஓட பெரிய முள் எப்பவும் 11 மணியை தாண்டியே இருந்து வர சூழல்ல சின்ன முள், 12 மணிக்கு கிட்ட வந்து வந்து போய்ட்டிருக்கு.

1947ஆம் வருஷம் சோவியத் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டதால நள்ளிரவுல இருந்து ஏழு நிமிடங்கள்ல தொடங்கி, 1952ஆம் வருஷத்துல அமெரிக்கா முதல் முறையா தெர்மோ நியூக்கிளியர் கருவியை சோதனை செஞ்சதால, 1953ஆம் வருஷம் கடிகாரம் 11.58ன்னு காட்டுச்சு. அதாவது உலகம் அழிய இன்னும் ரெண்டே நிமிடங்கள் அப்படின்ற உச்சகட்ட அலாரம் தான் அது. அதே மாதிரி 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்த அப்பவும், 1974ஆம் ஆண்டு இந்தியா அணு ஆயுத சோதனை நடத்துன போதும் Doomsday கடிகாரத்துல மோசமான மாற்றங்கள் ஏற்பட்டுச்சு. 2017ஆம் ஆண்டு வட கொரியா தன்னோட அணு ஆயுத சோதனைகளை தீவிரப்படுத்தின அப்ப, உலகம் அழிய இரண்டரை நிமிடங்கள் அப்படின்ற அளவு அப்படியே 2018ஆம் ஆண்டு இரண்டு நிமிடங்கள் என்ற குறியீட்டு அளவுகோலை எட்டுச்சு.

இந்த நிலையில தற்போது உலகம் அழிய இன்னும் 90 வினாடிகள் என்ற கால அளவு Doomsday Clockல வந்து இருக்குறது, உலகம் தன்னோட அழிவை எவ்வளவு வேகமா நெருங்கி போய்ட்ருக்கு அப்படின்றத தான் உணர்த்துது. போட்டிப் போட்டுட்டு நாடுகள் அரங்கேற்றி வர அணு ஆயுத சோதனைகள், ரஷ்யா உக்ரைன் போர் நீட்டிப்பு, இஸ்ரேல் ஹமாஸ் போர், அது மட்டுமில்லாம கைமீறி போய் இருக்க காலநிலை மாற்றங்கள் – இதெல்லாம் தான் Doomsday Clockஓட தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம்.

இதென்ன பெரிய விஷயம்? Doomsday Clock நம்பகத்தன்மை மிகுந்ததா? அதுல சொல்றத அப்படியே நம்பனுமானு சாமானியர்கள் வேனா கேள்வி எழுப்பலாம். ஆனா, அணு ஆயுத ஆய்வுப் பத்திரிகையால 70 ஆண்டுகளுக்கு முன்னாடி தொடங்கப்பட்ட இந்த Doomsday Clockக்கு அறிவியல் வட்டாரங்கள்ல இன்னைக்கும் தனி மதிப்பு இருக்கு.

ஆய்வாளர்கள் எந்த அடிப்படையில இந்த முற்களை நகர்த்துறாங்க என்பதே கேள்விக்குறியாக இருக்கு. அது மட்டும் இல்லாம, நள்ளிரவுக்கு ரொம்ப கிட்டவே எப்பவும் முற்களை வச்சு மனிதர்களை பயமுறுத்துறதுனால யாருக்கு என்ன லாபம்னு வெகுஜன பார்வைல இருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், 

அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அபாயம், பொறுப்பில்லாம அரசுகள் எடுக்குற முடிவுகள், சுற்றுசூழல் சார்ந்த சிந்தனை இப்படி பல முக்கியமான பரிமாணங்கள் பற்றிய உரையாடலை தொடங்க இந்த Doomsday Clock என்னைக்குமே காரணமா அமையும் என்பதுல மாற்றுக்கருத்து இருக்க முடியாது.