மாதம் ரூ.299 போதும்.. 3,000 ஜிபி டேட்டா வரும்.. ஜியோ, ஏர்டெல் பொழப்பில் மண்ணள்ளி போட்ட KFON!

155
Advertisement

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியாருக்கு சொந்தமான டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் மட்டும் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகின்றன.நாட்டில் நாள்தோறும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இன்டர்நெட் சேவைகள் போய் சேரவில்லை.

அதற்கு டெலிகாம் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலையும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால், நம் நாட்டில் அவ்வளவு கோடி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். அதற்காக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அடித்தட்டு மக்களிடையே இன்டர்நெட் சேவையை கொண்டு சேர்க்க முடியவில்லை.

ஆனால், கேரள மாநில அரசு, நாட்டிலேயே முதல் முறையாக இன்டர்நெட் சேவை வழங்கும் அரசாங்கமாக கே.எஃப்.ஓ.என் (KFON) திட்டத்தின் வாயிலாக உருவெடுத்துள்ளது. இந்த கேஎஃப்ஓஎன் திட்டம் 20 ஏழை லட்சம் குடும்பங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவை வழங்குவதையும், மற்றவர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் வழங்குவதை விட மலிவான விலையில் இன்டர்நெட் சேவை வழங்குவதையும் அடிப்படையாக கொண்டது.

இந்த கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கில் உள்ள 9 மலிவு விலை திட்டங்களை பார்த்தால், நீங்களே “கேரளாவுக்கு குடியேறிவிடலாம் போலயே” என்று சிந்திக்கும் அளவுக்கு உள்ளதா