1997 – 2012 க்குள் பிறந்தவரா நீங்கள்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

65
Advertisement

வழக்கமாக நைண்டிஸ் கிட்ஸை கலாய்த்து மீம்ஸ் போடுவது மட்டுமே பெரும்பாலான டூ கே கிட்களின் ஃபுல் டைம் ஜாப் ஆக இருக்கும். அதுவும், நைண்டிஸ் கிட் என்றாலே திருமணமாகாமல் பெண் தேடி கொண்டிருப்பதைப்போல் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதில் அலாதியான பேரின்பம் கொள்பவர்கள் டூ கே கிட்ஸ். ஆனால், நைண்டிஸ் கிட்ஸ், டூ கே கிட்ஸ் இருவரையும் ஒண்ணுமண்ணாக்கி செம்ம ஷாக் கொடுத்திருக்கிறது அண்மையில் வெளியாகியிருக்கிற ஓர் ஆய்வு.

அதாவது, வயது ஆகுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், இருக்கும் வயதை விட அதிக வயதான தோற்றத்தை பெறுவது அதை விட கொடுமையான விஷயம்.  இதை தான் 1997ஆம் ஆண்டு முதல் 2012ஆம் வருடங்கள் வரை பிறந்தவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.  Gen Z தலைமுறையினருக்கு இந்த சிக்கல் வருவதற்கு காரணம் என்ன? தீர்வுகள் என்ன என்பதைதான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்…

1881ஆம் ஆண்டு முதல் 1996 வரை பிறந்தவர்கள் Millenials என்று அழைக்கப்படுகிறார்கள். நியாயமாக அவர்களுக்கு பிறகு பிறந்த Gen Z தலைமுறையினர் இளமையாகத்தானே இருக்க வேண்டும்? அண்மையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜோர்டான், தன் அம்மாவுடன் வெளியே சென்றால் அக்கா- தம்பியா என்று பலர் அழைப்பதாக குறிப்பிட்டு தனக்கு 26 வயதே ஆகிறது என வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். இதன் பிறகே, சமூகவலைதளங்களில் இந்த விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.

முழுக்க முழுக்க டிஜிட்டல் யுகத்தில் பிறந்துள்ள Gen Z தலைமுறையினருக்கு வெளியே சென்று விளையாடும் பழக்கம் முற்றிலுமாக குறைந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தோல் இருக்கிறது. ஆனால், இன்ஸ்டாகிராமில் Influencerகள் பரிந்துரைக்கும் பல்வேறு விதமான skincare productகளை தற்போதைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

Skincare பற்றிய அரைகுறை புரிதல், மது புகை உள்ளிட்ட பழக்கங்கள், fast food கலாச்சாரம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை Genz தலைமுறையினருக்கு சீக்கிரமாகவே வயதான தோற்றத்தை அளிப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. Instagram, Facebook  மாதிரியான சமூகவலைதளங்களில் லைக் வரவில்லை என்பதற்காக கூட இளம் தலைமுறையினர் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

-ஷைனி மிராகுலா