கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜெகர்த்தா நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 356 பயணிகள் உட்பட 368 பேர் பயணித்தனர்.
இதில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிருக்கினார். இதனையடுத்து, விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 4 மணி நேரத்துக்கு பிறகு தாமதமாக விமானம் சென்னையில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜெகத்ராவுக்கு புறப்பட்டு சென்றது. இதில் 368 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.