பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை – வீங்கிப்போன முகம்

2074

பெங்களூரில் வசித்து வருபவர் சுவாதி. கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியுள்ளார். அதன்பேரில் அந்த ஊசியை செலுத்திக்கொண்ட சுவாதியின் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பும் மாறி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை.

மேலும், அவர் வெளியே வருவதை விட்டுவிட்டார். மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.