ஐசிசி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் 2023 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த வீரர்களுக்கான
பட்டியலை வெளியிட்டுள்ளது.ஐசிசி உலக அளவிலான டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி 20
போன்ற மூன்று விதமான போட்டிகளில் விளையாடி வரும் மிகச்சிறந்த வீரர்களுக்கான
பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்கள்.ஆம், டி20 உலகக்கோப்பை
இந்தாண்டு நடைபெற உள்ள சூழலில் யார் உலகக்கோப்பை அணியில் இருப்பார்கள் என்ற
பேச்சு சூடுபிடித்துள்ளது., இந்த நிலையில் , பட்டியலில் இடம் பெற்றவர்கள் அணியில் இருக்க
வாய்ப்பு அதிகம் உள்ளதா? என்ற பேச்சு தான் டாப் ட்ரெண்டிங் ஆஃப் த ஸ்போர்ட்ஸ் கார்னர்
ஆகவும் இருந்து வருகிறது.
ஐசிசியின் தரவரிசையின் படி , இந்திய அணி ஏற்கனவே 68 போட்டிகளில் விளையாடி ,
18041 புள்ளிகளோடு மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது. இதில்
இங்கிலாந்து நாடு கடந்தாண்டு நடந்த 48 போட்டிகளில் கலந்து கொண்டு 12305
புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் , நியூசிலாந்து நாடு 55 போட்டிகளில் பங்கேற்று
13988 புள்ளிகளோடு மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அதேபோல் ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வீரர்கள் யாரெல்லாம் என்றால் ,சிறந்த
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ்
முதலிடத்தில் உள்ளார்.வலதுகை பேட்ஸ்மேனான இவர் அநேக டி20 போட்டிகளில் மட்டும்
தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து 869 புள்ளிகள் என்ற மதிப்பீடு பெற்று முதலிடம்
வகிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இடதுகை பேட்ஸ்மேனான யஷஷ்வி ஜெய்ஸ்வால் டி 20 போட்டிகளில்
33.46 என்ற பேட்டிங் ஆவ்ரேஜூடன் 161.93 ஸ்டிரைக் ரேட்டுடன் 739 மதிப்பீட்டு
புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளார்.
வலதுகை பேட்ஸ்மேன் ஆன ருத்துராஜ் கெய்க்வாட்-ன் பெயர் 2023 ஆம் ஆண்டுக்கான
ஐபிஎல்-ல் அதிகம் உச்சரித்த பெயர். அவர் டி 20 போட்டிகளில் மிகச் சிரத்தையோடு ஆடி
35.71 என்ற பேட்டிங் ஆவ்ரேஜூடன் 140.05 ஸ்டிரைக் ரேட்டுடன் 661 மதிப்பீட்டு
புள்ளிகளோடு ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
இந்த பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20
உலகக்கோப்பையிலும் இடம்பெறுவார்கள் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய
கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அடுத்ததாக சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் , அக்சர் படேல் மற்றும் ரவி
பிஷ்னோய் இடம் பெற்றுள்ளனர்.
அக்சர் படேல் இடது கை பந்து வீச்சாளர் என்பதைப் போல் அவர் சிறந்த SLOW LEFT ARM
ORTHODOX என்பதும் பொருத்தம். கிட்டத்தட்ட டி 20 போட்டிகளில் இவருடைய கிரிக்கெட்
டி20 கேரியரில் 49 விக்கெட்களை எடுத்துள்ளார்.பவுலிங் ஆவ்ரேஜ் மட்டும் 24.20 என்ற
அளவில் வைத்துள்ளதால் , மிகச்சிறந்த பந்துவீச்சாளருக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில்
ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ரவி பிஷ்னோய் LEG BREAK GOOGLY – ல் சிறந்து ஆடும் வீரர்.இதுவரை அவர் ஆடிய டி20
போட்டிகளில் 36 விக்கெட்கள் எடுத்துள்ளார். ரவி பிஷ்னோயின் சிக்னேச்சர் ப்ளே-க்களை
நம்மால் ஐபிஎல்-லும் பார்த்திருக்கக்கூடும். அவர் 666 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஆறாவது
இடத்தில் உள்ளார்.
ஆக இந்த வீரர்களுடன் இளம் வீரர்களுக்கும் பவுலிங்கில் இடம் கொடுக்கலாம் என்பதே
அனைவரின் எதிர்பார்ப்பு.
ஆல் ரவுண்டரில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இடம்
பெற்றுள்ளனர்.
இதில் ரவீந்திர ஜடேஜா இடது கை பேட்ஸ்மேனாக களத்தில் அதிரடி காட்டுகிறார் என்றால்,
LEFT ARM ORTHODOX என்னும் போது அவருடைய ஸ்பின்னிங் பந்துகளால்
சூறையாடப்பட்ட வீரர்கள் அநேகம்.
இதே போல் ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஐசிசி
பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தன்னுடைய சிறந்த பங்களிப்பால் , பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர்கள் இந்தாண்டு
நடைபெற உள்ள உலகக்கோப்பையில் அணியில் இடம் பெறுவதற்க்கான சாத்தியக்கூறுகள்
அதிகம்.
இந்தாண்டு இளம் டி 20 உலகக்கோப்பையில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பதனை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-பவித்ரா