செக்யூரிட்டி டூ வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ… யார் இந்த ஷமர் ஜோசப்?

356
Advertisement

27 வருடங்கள்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் தடம் பதிச்சிருக்கு வெஸ்ட் இண்டீஸ் டீம். இதுல, ஒட்டுமொத்த கவனமும் ஷமர் ஜோசப் மேல தான் திரும்பியிருக்கு. காரணம், அவர் பண்ண தரமான சம்பவம் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ்ல ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, மொத்தமா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றியை சாத்தியமாக்கி இருக்காரு ஷமர்.

அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களே ஆஸ்திரேலிய மண்ணில பந்துவீச திணறும்போது ஷமர் வேற லெவல் திறமையை வெளிப்படுத்தி இருக்காருன்னு தான் சொல்லணும். முதல் போட்டியில இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தோடதுன்னா பாத்துக்கோங்க.

ஸ்டார்க், லயான்னு அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து எல்லாரையும் திரும்பி பாக்க வச்ச ஷமர், கரிபியன்ல உள்ள பராகரா அப்படின்ற கிராமத்துல சாதாரண கூலித்தொழிலாளியா வாழ்க்கையை தொடங்குனவருன்னு சொன்னா நம்ப முடியுதா? அது மட்டும் இல்லாம 12 மணி நேர shift கொண்ட செக்யூரிட்டி வேலை எல்லாம் பாத்துட்டு வந்த ஷமர், கிரிக்கெட் மீதான ஆர்வத்துனால வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடத் தொடங்கியிருக்காரு.  ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையா இடம்பிடிச்சு காபா டெஸ்டில் பிளேயிங் லெவன் வரைக்கும் வந்து தன்னுடைய கடின உழைப்பு காரணமா உலகத்தையே திரும்பி பாக்க வச்சு இருக்காரு. ஷமர் ஜோசப்போட வெற்றிப்பயணம் இன்னுமே தொடரும் என்பதுல எந்த சந்தேகமும் இல்ல.

-ஷைனி மிராகுலா