ஐசிசி-யின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை அயர்லாந்தின் ஹாரி டெக்டர் தட்டி சென்றார்….

562
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது. இந்த பரிந்துரை பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் ஆசம், வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை பட்டியலில் இலங்கையின் சாமரி அதபத்து, ஹர்ஷிதா மாதவி, தாய்லாந்தின் திபாட்சா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அயர்லாந்தின் ஹாரி டெக்டருக்கும், சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் திபாட்சாவுக்கு வழங்கப்பட்டுள்ளது