திருமண விழாக்களில் இசையை தடை செய்த தலிபான்கள்…

747
Advertisement

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள திருமண மண்டபங்களில்,கொண்டாட்டங்களின் போது இஸ்லாமியத் தீர்ப்புகளுக்கு முரணான இசையை இசைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக அல் ஜசீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமண விருந்துகளில் இனி இசை அனுமதிக்கப்படாது என்று மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு திருமணத்தில் இசை இல்லை என்றால், ஒரு திருமண விழாவிற்கும் இறுதி சடங்குக்கும் என்ன வித்தியாசம்? என ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு விழாக் கூடத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத மேலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, பல கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரினர்.

தலிபான்கள் இசை இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்று கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.