ஆண்டனி பிளிங்கன் வரும் நேரத்தில் பில் கேட்ஸ்.. சீன அரசு அதிகாரிகளை சந்திக்கும் பெரிய தலைகள்…!

665
Advertisement

சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக பல டேட்டா அந்நாட்டின் அரசு அடுக்கி வைத்தாலும், பல முக்கியமான விஷயங்களை மூடிமறைத்து வருகிறது.

உதாரணமாக சீனாவில் வேலைவாய்ப்பின்மை அளவு மிகவும் மோசமாக உள்ளது, ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை படுமோசமாக உள்ளது.

ஆனால் இதுகுறித்த விஷயங்களை பெரிய அளவில் வெளிவிடாமல் மறைத்து வருகிறது சீனா. இதேவேளையில் ரஷ்யா உக்ரைன் போர் மத்தியில் சுமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனா மறுப்புறம் தைவான் எல்லையில் தொடர்ந்து ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.


இது மட்டுமா அமெரிக்கா – சீனா மத்தியில் தொடர்ந்து கடுமையான வர்த்தக சூழ்நிலை நிலவுகிறது. இதேபோல் பல விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக நிற்கும் சீனா உடனான உறவை மேம்படுத்த இரு நாட்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பல மாற்றங்களை செய்து வரும் சீனா, டெக் துறையில் வர்த்தகத்தையும், முதலீட்டையும் மேம்படுத்தும் முயற்சிகளை கையில் எடுத்து உள்ளது. இதன் வாயிலாக மார்ச் மாதம் ஆப்பிள் சிஐஓ டிம் குக்-ஐ சீனாவின் ப்ரீமியர் லீ கியாங் சந்தித்து பேசினார், கடந்த மாதம் டெஸ்லா சிஐஓ எலான் மஸ்க்-ஐ துணை பிரீமியர் டிங் க்சுயெக்ஸியாங் சந்தித்து பேசினார்.