ஏழை மாணவரின் கல்லூரி படிப்புக்கு உதவிய இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன….

144
Advertisement

கர்நாடக மாநிலம் உப்பள்ளி மகாலிங்கபுராவை சேர்ந்த மாணவர் அம்ருத் மாவினகட்டே.

இவர், PUC தேர்வில் 600-க்கு 571 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அம்ருத்தால் கல்லூரி படிப்பை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஏழை மாணவரின் கல்லூரி படிப்புக்கு உதவ முன்வந்தார்.

மாணவருக்கான கல்லூரி படிப்பு செலவை தானே கொடுப்பதாக தெரிவித்தார். ஏழை மாணவருக்கு உதவிய  இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன