FIFA 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி : இத்தாலியை எதிர்கொள்ளும் உருகுவே..

286
Advertisement

ஆர்ஜென்டினாவில் தற்போது நடைபெற்று வரும் FIFA 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலி அணியை உருகுவே அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது ஆர்ஜென்டினாவின் மல்டி-புரபோஸ் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஜூன் எட்டாம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் உருகுவே அணி இஸ்ரேல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இத்தாலி அணி தென் கொரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும், FIFA 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தென் கொரியா அணியை இஸ்ரேல் அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது ஆர்ஜென்டினாவின் மல்டி-புரபோஸ் விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் (11) இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.