டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 200 ஓட்டங்களை கடந்த இந்தியா அணி…

305
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் பத்து வீச தீர்மானித்தது
இதையடுத்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 151 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில் இன்று ஆரம்பமாகிய டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 52 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களை பெற்றுள்ளது.