உக்ரைன் போர் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது…

124
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது ஓராண்டை கடந்துள்ளது.

இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது. அதேவேளை, போர் தொடங்கியது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கூறியது குறிப்பிடத்தக்கது.