தாயாகும் ஆசை தமன்னாவிற்கு வந்துவிட்டது

336
Advertisement

தமிழில்  உச்ச நாயகியாக  உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறார். தற்போது அவர் 32 வயதை எட்டியதால் , திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எனவும் விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவியது , இது குறித்து பேட்டியில் விளக்கம் அளித்த தமன்னா, எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை உண்டு ,  திருமணம் செய்து கொண்டு, தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு நான் இதற்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறேன். இதனால் எனது பெற்றோரிடம்கூட தொலைப்பேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் சிறப்பாகச் செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்” என்றார்.