சிம்பு ஹிந்தியில் வேறு விதமாக அறிமுகம்  

394
Advertisement

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒருவர், அதிலும் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் தமிழ் சினிமாவில் இவரது மார்கெட் பலம் ஆகியுள்ளது.

இதனால் தற்போது ஹிந்தி சினிமாவிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு, இவரின் மிக நெருங்கிய நண்பரான மகத் நடிக்கும் டபிள் எக்ஸ், என்ற  ஹிந்தி படத்தில்  Taali Taali என்ற பாடலை பாடியுள்ளார் சிம்பு

இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார், அதில் ஹிந்தியில் பாடகராக அறிமுகமாகி உள்ளேன், நான் பாடிய முதல் பாட்டு என் நண்பனுக்காக,  துன்பத்திலும், இன்பத்திலும், மகத் நீ சிறப்பாகச் செயல்பட்டாய், உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் , மேலும் மக்களே பாட்டைக் கேட்டு ரசியுங்கள் என்றார்