90’ஸ் கிட்ஸ்க்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ள “ஸ்கூபி-டூ”

83
Advertisement

90’ஸ் ஹிட்ஸ்களின் பிடித்த கார்ட்டூன் நிகழ்ச்சியில் ஒன்று “ஸ்கூபி-டூ”.குறிப்பா இத்தொடரில் வரும் ஸ்கூபி-டூ கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கதாபாத்திரங்கள் ஒருபுறம் இருக்க,இதில் வரும் மிஸ்டரி வேன் பலரையும் கவர்ந்தது.2002 ஆம் ஆண்டில்  “ஸ்கூபி-டூ” கார்டூனிலிருந்து படமாக வெளியாகியது.இந்நிலையில்  முதல் பகுதி வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.

இதை கொண்டாடும்வகையில்,ஸ்கூபி-டூ திரைப்படத்தின் கதாநாயகன் ஷாகி ரோஜர்ஸ் வேடத்தில் நடித்த மேத்யூ லில்லார்ட், ரசிகர்களுக்கு  இன்பஅதிர்ச்சி அளிக்கும்விதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் , அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் “மிஸ்டரி வேன்” சுற்றுலா வண்டியாக பதிவுசெய்துகொள்ளலாம்.

Advertisement

வரும் ஜூன் 16 ஆம் தேதி முன்பதிவு தொடங்கும்.ஒரு இரவிற்கு இந்திய மதிப்பில் 1,564 ரூபாய் என தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வண்டியில் விருந்தினர்கள் பார்த்து ரசிக்க ஸ்கூபி-டூ திரைப்படம் ஒளிபரப்பப்படும்,புத்தக பிரியர்களுக்கு ஸ்கூபி-டூ கதை புத்தகங்கள் வைக்கப்படும்,மர்மம்மான சில விளையாட்டுகளும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது