பெண்கள் பிரிமீயர் கிரிக்கெட் போட்டியை விரிவுபடுத்த முடிவு…

155
Advertisement

மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ரூ.5 லட்சமும், டெல்லி கேபிடல்ஸ் வீராங்கை ராதா யாதவிற்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போன்று பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று 5 அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்றன. கடந்த 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் நேற்று 26ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியுடன் முடிவடைந்தது. எட்டு எட்டு போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

அதிக போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்றிருந்த டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், யுபி வாரியர்ஸ் அணியும் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும் மோதின. இந்தப் போட்டியை ஆண்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அணியின் கேப்டன் மெக் லேனின்ல் 35 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதுவே போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் இருவரும் அதிரடி காட்டினர். சிக்சரும், பவுண்டரியும் விளாசவே டெல்லி கேபிடல்ஸ் ஓரளவு 131 என்று ரன்களை எட்டியது.