உலக சைக்கிள் தினம்

254

உலக சைக்கிள் தினமான இன்று, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இருந்து சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், ஃபிட் இந்தியா இயக்கம், கேலோ இந்தியா இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆரோக்கியமான இந்தியா இயக்கம் அனைத்தையும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சைக்சிள் பேரணியில் 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.