ஜப்பானில் சாஸ் பாட்டிலை சுவைத்த இளைஞரிடம் சம்பந்தப்பட்ட உணவகம், 4 கோடி ரூபாயை இழப்பீடாக கோரி வழக்குப்பதிவு செய்துள்ளது….

290
Advertisement

ஜப்பானில் உள்ள அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது.

இந்த உணவகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி வந்த இளைஞர், அங்கு வைக்கப்பட்ட சாஸ் பாட்டிலை எடுத்து சுவைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி, முகம் சுளிக்க வைத்தது.

இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

எனவே சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு 4 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் அந்த உணவகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.