ராஜராஜ சோழன் உண்மையில் சிறந்த அரசனா? பொன்னியின் செல்வன் படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…

183
Advertisement

பொன்னியின் செல்வனான அருண்மொழி வர்மன் ராஜராஜ சோழன் என அழைக்கப்படுகிறார்.

இலக்கியங்களில் வானளாவ புகழப்படும் இவரது ஆட்சி வரலாற்றில் எப்படி அமைந்திருந்தது என்பதை இப்பதிவில் பார்ப்போம். சுந்தர சோழருக்கும் வானவன் மகாதேவிக்கும் பிறந்த ஆதித்த கரிகாலனே இளவரசராக முடிசூட்டப்பட்டு இருந்தாலும், அவர் சதித் திட்டங்கள் காரணமாக கொல்லப்பட்டதால் ராஜராஜ சோழன் அரசராவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் கிபி.970 முதல் கிபி.975 வரையில் மதுராந்தகன் உத்தமச்சோழன் ஆட்சி செய்தார். கிபி.985இல் உத்தமசோழனின் மறைவிற்கு பிறகு, ராஜராஜசோழன் பதவியேற்றுக் கொண்டார். வானவன் மாதேவி என்ற மனைவியின் மூலம் இவருக்கு மதுராந்தகன், மாதேவ அடிகள் மட்டும் குந்தவை என்ற மூன்று குழந்தைகள் பிறந்தாலும், இவருக்கு பத்திற்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள காந்தளூர் பகுதியை கைப்பற்றிய பிறகு, ‘கேரளாந்தகன்’ என்ற பட்டப்பெயரை சூட்டிக்கொண்டார் ராஜராஜசோழன். பல படையெடுப்புகளினால் சோழ நாட்டின் நிலப்பரப்பை அதிகரித்ததில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. வரி விதிப்பு போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவினாலும் அப்போதைய சாமானிய மனிதர்கள் ஒடுக்கப்பட்டார்களா என்பது கேள்விக்குறியே. வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் போர் வெற்றிகள் ஆகியவற்றை முதல் முறையாக கல்வெட்டுகளில் பொறிக்கத் தொடங்கினார் ராஜராஜசோழன்.

ஆதித்த கரிகாலன் இறப்பிலும் மதுராந்தகன் மட்டுமில்லாமல் சுந்தரசோழருக்கும் தெரிந்தே சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த மர்மத்தை அடிப்படையாக வைத்தே வரலாற்றை சுவாரஸ்யமாக புனைந்து கல்கி பொன்னியின் செல்வன் புதினத்தை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் கட்டடக் கலை உள்ளிட்ட துறைகளில் ராஜராஜசோழனின் பங்களிப்பு இருந்தாலுமே, சோழ அரசக் குடும்பத்தை சுற்றி பல மர்ம முடிச்சுகளும் புரியாத புதிர்களும் உள்ளன என்பதில் மாற்றுக்கருத்தில்லை.