தளபதி 66-ல் விஜய்க்கு வில்லனாகும் அஜித் வில்லன் !

164
Advertisement

விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘தளபதி 66’ என்ற தலைப்பு தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ‘தளபதி 66’படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

Advertisement

இயக்குனர் வம்சி ஏற்கனவே கூறியது போல், ‘தளபதி 66’ எமோஷனல் பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆகையால் படத்திற்கு ஒரு வலுவான வில்லன் தேவை. எனவே, இப்படத்தில் வில்லனாக நடிக்க விவேக் ஓபராயை தயாரிப்பாளர்கள் பரிசீலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் மூலம்தமிழ்சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். அவர் ‘தளபதி 66’ படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டால், அது அவரது இரண்டாவது தமிழ் படமாக இருக்கும்.

மேலும் அவர் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் வில்லனாக நடித்த அரிதான பிரபலங்களில் ஒருவராக மாறுவார். ‘தளபதி 66’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்த படங்களை விட இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பதாகவும், தமன் இசையமைப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தத் திரைப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. இது அவர்களின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.