தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் படத்தை நெஞ்சில் டாட்டூ போட்ட விஷால்..!

89
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஷால், இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

அதற்குப் பிறகு துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்க திட்டம் போடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் வழியாக இயக்குநர் என்ற புதிய அவதாரத்தை அடைய உள்ளார். இதனால் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதனை ஏற்க மறுத்தார் விஷால் என்று கூறப்படுகிறது,

ஆனால் அந்த செய்தியை விட தற்போது இவரின் நெஞ்சில் வரைந்து இருக்கும் புதிய டாட்டூ சமூகவளைதளங்களில் மிகவும் வைரலாக மாறியுள்ளது, இவர் புரட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான விஷால், அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது உருவத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறாராம்