“விஜய் 66 “அரசியல் படமா?

351
Advertisement

‘விஜய் 66’அரசியல் படமா? இல்லையா? என்பது குறித்து வெளிவந்த தகவலை இயக்குநர் வம்சி மறுத்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘பீஸ்ட்’.. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.

தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் பொருட்செலவில் “விஜய் 66 “உருவாகவுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் அதில் இந்தப் படத்தின் கதைக்களம் அரசியல் பின்னணி என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவள் தொடர்பாக இயக்குநர் வம்சி கூறுகையில் “இது அரசியல் பின்னணி கொண்ட கதைக்களம் அல்ல. எனது முந்தைய படங்கள் போன்று எமோஷனலான கதைக்களம்” என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

‘விஜய் 66’ படத்தின் தமிழ் வசனங்களை இயக்குநர் ராஜுமுருகன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.