வீரப்பனின் கூட்டாளி திடீர் மரணம்! இறுதி சடங்கில் முத்துலட்சுமி பங்கேற்பு…! 

200
Advertisement

தமிழகம் மற்றும் கர்நாடக போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான சைமன், இன்று அதிகாலை 4 மணிக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஒட்டர்தொட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். இவர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர். இவர், பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர். குறிப்பாக, வீரப்பனைப் பிடிக்க 60 பேர் கொண்ட வனக்காவல் படையைத் தமிழக அரசு முதன்முதலில் எஸ்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் உருவாக்கியது.

இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்த வீரப்பன், 1993 ஏப்ரல் 9-ம் தேதி தமிழக கர்நாடக எல்லையான பாலாற்றில் சொரக்காய் மடுவு என்ற இடத்தில் கண்ணிவெடி வைத்து வனக்காவல் படை வாகனத்தைத் தாக்குகிறார். அந்தக் கண்ணிவெடி தாக்குதலில் 24 காவலர்கள் சுக்குநூறாக வெடித்துச் சிதறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் எஸ்.பி கோபாலகிருஷ்ணன், கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாகப் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அந்தச் சம்பவம், தமிழகம் – கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.