அடக்கடவுளே… டிசைனே சொதப்பல்… மொத்தமாய் மாறும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

449
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையத்தின் பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.ஆனால் அதில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் திட்டமிடப்பட்டு பேருந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொறுப்பாளர் அமைச்சர் சேகர் பாபுவுக்கு வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்.அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கும் வகையில் 1.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் போலீஸ் அகாடமி சாலையில் சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு புதிதாக சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வண்டலூர் சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது மாற்றுப்பாதையில் செல்ல ஏதுவாக 6 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.