செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு!!!

316
Advertisement

செந்தில் பாலாஜி தொடர்பான மூன்று மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பரிந்துரைத்துள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடிக்கு ரெண்டு பக்கமும் அடி: ஆளுமைக்கு வந்த சோதனை- பாஜக பலே பாலிடிக்ஸ்!நேற்று ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பினாமி சொத்துக்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும், அந்த குற்றச்சாட்டின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மனுக்களை நீதிபதி எஸ்.அல்லி இன்று (ஜூன் 15) விசாரிக்கிறார்.