மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

782
Advertisement

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த நிலையில், சில பயிற்ச்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் ஆகியோர் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரியில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தபோது வீரர்கள் அதை மறுத்துவிட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.