செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!

133
Advertisement

அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கை வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததாக செய்தி வந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்படவில்லை. 2 ஆண்டுகளாக முறைகேடாக பார்கள் வருகின்றன. அரசுக்கு வருகின்ற வருவாய் திமுகவினர் மூலமாக மேலிடத்திற்கு சென்று இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.2 ஆண்டுகளில் முறைகேடாக பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனர். இப்படி பல கோடி ரூபாய் முதல்வரின் குடும்பத்துக்குச் சென்றதாக பத்திரிக்கை செய்திகள், வெளி வட்டார செய்திகள் வந்துள்ளன.