உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி – இந்தியா கொண்டுவர தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

46

உஸ்பெகிஸ்தானில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாணவியை இந்தியாவிற்கு கொண்டுவர, விமான டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு, மாணவியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சதீஷ்குமார் – சாந்தலட்சுமி தம்பதியின் மகள் திவ்யா சொர்ணமால்யா, உஸ்பெகிஸ்தான் நாட்டில் மருத்துவம் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி திவ்யா, நடக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகிறார்.

Advertisement

பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு உஸ்பெகிஸ்தான் சென்று மகளை பார்த்த சாந்தலட்சுமி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகளுடன் நாடு திரும்ப விமான டிக்கெட் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் தாயார் கண்ணீர் மல்க அரசுக்கு விடுத்த கோரிக்கை வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.