சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான உக்ரைன் நடிகை – யார் இவர் ?

426
Advertisement

நடிகர் சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டாக்டர்’. தற்போது சிவகார்த்திகேயன் டான், அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரயாபோசப்கா நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரயாபோசப்கா ஒரு மாடலாக இருந்து வருகிறார். அவர் உக்ரைன் மொழியில் ‘எதர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பின்னர் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5 சீரிஸில் நடாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.