40 நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல்

457

3 மாதங்களை கடந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.

கிழக்கு உக்ரைனில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின.

உக்ரைனின் மின்னணு உளவு மையத்தையும் ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இந்த தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷெங்கோவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 48 உக்ரைன் படையினர், ஆயுதங்கள், 2 வெடிபொருள் கிடங்குகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.