மாமன்னரான உதயநிதி ஸ்டாலின்

357
Advertisement

தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இரண்டாவது படத்திலேயே தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ்.  இந்த படத்திற்கு பிறகு விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பிறகு உதயநிதி ஸ்டாலின் படத்தை முடித்த பிறகுதான் துருவுடன் இணைகிறார்  என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் கூட்டமாக மாடுகள் நிற்பதுபோல் மற்றும் பறவைகள் பறப்பது போல் இடம் உள்ளது.  மாரி செல்வராஜின் படங்களில் குறியீடுகள் அதிகமாக இருக்கும், அந்த வகையில் இந்தப் படத்திலும் முக்கிய சமூக பிரச்சனையை பேச உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் போஸ்டரில் முதலில் வடிவேலுவின் பெயரும், பிறகு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் பெயர் உள்ளது.  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திற்கு “மாமன்னன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.  மேலும் இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். தற்போது அருண் காமராஜ் இயக்கத்தில் ஆர்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிட்டத்தக்கது .