கார், இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு

302

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆட்டோமொபைல் விற்பனை விலையும்  அதிரடியாக உயர்ந்துள்ளது.

புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்பகப்பட்ட  சாதாண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலை 8 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னணி கார்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை கார்கள் விற்பனையாகிறது.

இதற்கு வாகன இறக்குமதி குறைவும், பண வீக்கமும்  முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதனால், இருசக்கர வாகனம், மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.