சென்னை-டெல்லி அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது…

87
Advertisement

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத் தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள சென்னை – டெல்லி அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை-டெல்லி அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.