ராணிப்பேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி தொழிற்சாலை வளாகத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

163
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஈராளச்சேரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இத்தொழிற்சாலை வளாகத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் 50 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென்று பிளாஸ்டிக் கழிவுகளில், தீ விபத்து ஏற்பட்டது.

தீயானது மளமளவென பரவி பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீருடன் ரசாயனக ழிவுகளை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.