சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது…

26
Advertisement

சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை குறைக்கும்படி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்ககளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடந்த சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டத்தில், மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதால் சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என கூறினார். சமையல் எண்ணெய் சில்லறை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.