செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: ஜெயக்குமார் கோரிக்கை!

271
Advertisement

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணையில் இருந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக் மூலம் சில்லறை கடைகளுக்கு வர வேண்டும். ஆனால் ஆலைகள் நேரடியாக பார்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் கோடிக்கணக்கான அரசு பணம் கஜானாவுக்கு வராமல் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே செல்லும் சூழல் நிலவுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுப்பது சரி அல்ல. அமலாக்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய செந்தில் பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சினை உள்ளது?