செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவமனை அறிவிப்பு!!!

165
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் நீட்சியாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் கைது செய்வதாக அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்த பிறகே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தார். அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.“மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி வயது 47, அவர்களுக்கு இருதய ரத்த பரிசோதனை 14-06-2023 அன்று காலை 10.40 மணி.

அப்பரிசோதனையில் மூன்று முக்கிய இரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது” என்று ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.