செந்தில் பாலாஜி கைது.. களமிறங்கிய ஆளுநர் ஆர்.என் ரவி.. போனை எடுத்து அவங்களுக்கே கால் பண்ணிட்டாராமே

231
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தற்போது ஆளுநர் ஆர் என் ரவியும் களமிறங்கி உள்ளார். முக்கியமான சிலருக்கு ஆளுநர் ஆர். என். ரவி போன் செய்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

அவருக்கு சில நிமிடங்களுக்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. ஆஞ்சியோ என்பது தமனி சார்ந்த பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு பயன்படுத்தப்படும். இதுபோக குறுகலான அல்லது தடைபட்ட தமனிகளை சரி செய்ய பயன்படுத்தப்படும். மேலும் நரம்புகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

ஒரு வடிகுழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு காற்றழுத்தப்பட்ட பலூன் தமனியின் பாதைக்கு அனுப்பப்பட்டு பின்னர் நரம்பு அல்லது தமனி பாதையின் அளவு பெரிதாக்கப்பட்டு ரத்த ஓட்டம் அல்லது மூச்சு காற்று ஓட்டம் சரி செய்யப்படும். இந்த ஆஞ்சியோ சிகிச்சைதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட உள்ளதாம்.

ஆஞ்சியோ முடித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை. செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.