3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு.. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை…..

260
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக சிலரை ஏமாற்றி பணம் பெற்றதாக அவர் மீது மோசடி புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு சமாதானமாக போவதாக செந்தில் பாலாஜியுடன் வழக்கு தொடரப்பட்ட 4 பேரில் ஒருவரான சண்முகம் தெரிவித்தார்.


இதையேற்ற உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறிய உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாகவே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் இதயத் துடிப்பை கண்காணிக்கும் ஐசிஜி மருத்துவ அறிக்கை நார்மலாக இல்லை. காலை 9 மணிக்கு பிறகே செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும். செந்தில் பாலாஜி மயக்கத்தில்தான் இருக்கிறார். செந்தில் பாலாஜியின் இதயத் துடிப்பும் ஆக்ஸிஜன் அளவும் கண்காணிக்கப்படுகிறது. 2 முதல் 3 நாட்கள் வரை செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.