மு.க.ஸ்டாலின் டெல்டா பயணம்… கடைமடையில் தரமான ஏற்பாடுகள்… இன்னும் மூன்றே நாட்கள் தான்!

136
Advertisement

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் என்றால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சொல்லலாம்.

இவற்றில் காவிரி ஆறு பல கிளைகளாகப் பிரிந்து சென்று இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. இது பார்ப்பதற்கு முக்கோண வடிவில் தட்டையான நிலப்பரப்பாக காட்சியளிக்கும். இதனையே கழிமுகம் அல்லது டெல்டா என்று அழைக்கிறோம்.
இந்த பகுதியில் நீர்வரத்து நன்றாக இருப்பதால் வயல்வெளிகள் ஏராளமாக காணப்படும். குறிப்பாக நெல் வயல்களை சொல்லலாம்.

இதனால் டெல்டா பகுதிகளில் விவசாயம் செழித்து நெற்களஞ்சியமாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.அந்த வகையில் நடப்பாண்டு ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இவை கடைமடை வரை சென்றடைய வேண்டும். அப்போது தான் டெல்டா விவசாயிகள் முழுமையாக பயன்பெறுவர்.

அதற்கு வாய்க்கால்களில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்,டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக 80 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாறு பணிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 8) இரவு தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.