இப்பவே ரிசல்ட் தெரியுது.. முழு எனர்ஜியில் தலைவர்: ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் அப்டேட்…!

220
Advertisement

ரஜினி படங்களில் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இந்தப் படம் குறித்த அதிரடியான அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகியிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் இந்தப் படம் உருவானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. ஆனால் இந்தப்படத்தின் வெற்றியால் சிறுத்தை சிவா வீட்டுக்கே நேரில் விசிட் அடித்தார் ரஜினி.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு வழங்கினார் ரஜினி. தமிழ் சினிமாவில் டார்க் காமெடி படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விஜய் இயக்கத்தில் நெல்சன் கடைசியாக இயக்கிய ‘பீஸ்ட்’ படம் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது.

இதனால் நெல்சன் தற்போது இயக்கி வரும் ‘ஜெயிலர்’ படத்தை வெறித்தனமாக இயக்கி வருகிறார். இந்தப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, யோகி ப்பு, மிர்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.