சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் புதிய அவதாரம்!

486
Advertisement

தமிழகத்தின் பிஸ்னஸ் மாக்னெட் அகா தனிக்கென ஒரு தனி இடத்தை பிடித்து அதில் நிலைத்து நிற்கும் சரவணா ஸ்டோஸ் ஓனரான சரவணா அருளின் புதிய அவதாரமாக அவர் திரை துறையில் கால் பதிக்கிறார்.

தி லெஜெண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் சரவணா அருள் நடிக்க

JD and JERRY இயக்கத்தில் உருவாகி வரும் தி லெஜெண்ட் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியான படத்தின் கிலிம்ப்ஸில் சரவணா அருள் கிளாசிக் ஆன உடையில் ஸ்டைலிஷ் ஆனா தோற்றத்துடன் ஒருபக்கம் கவனத்தை ஈர்க்க

மறுபக்கம் ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை பலரின் ரிங்க்டோன் ஆகா மாறும் அளவிற்கு ஒரு GOOSBUMPS BGM அகா அமைந்துள்ளது.

சரவணா அருள் அவார்ட பங்க்ஷன்ஸ்,ப்ரெஸ் மீட்ல் வருவது ,பங்கேற்பது என சில ஆண்டுகளாகவே அவர் அதிகம் மீடியாவில் ஆர்வம் காட்டி வந்தார்.

அப்போதே அவரை பலரும் எப்போது திரையில் ஹீரோவாக தோன்றுவீர்கள் என பல கேள்விகள் எழுப்பினார்கள்,

அதற்கெல்லாம் பெரிதும் பதில் கூறாமல் தட்டி கழித்த அவர்,பிறகு விளம்பரங்களில் தோன்றுவது ,போட்டோஷூட்ஸ் புகைப்படங்களை வெளியிடுவது என சிறிது சிறிதாக ஈடுபட்டார்.

பல விமர்சனங்களை சந்தித்த அவர் எந்த நெகடிவ் கமெண்ட்ஸையும் காதில் வாங்காமல் பாசிட்டிவாக தனக்காகவும் தனது ரசிகர்களுக்காகவும் மும்முனைப்போடு செயல்பட்டார்.

தற்போது வெளியாகி இருக்கும் தி லெஜெண்ட் படத்தின் கிலிம்ப்ஸ் நல்ல வரவேற்பை பெற்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.