உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஜிங்யா ரெஹானே உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்…

103
Advertisement

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், ஜூன் மாதம் 7ம் தேதி, உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய  அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்தப்போட்டிக்கான 15-பேர் கொண்ட இந்திய அணியை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ரோஹித்சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட்கோலி, கே.எல்.ராகுல், ஷூப்மென் கில், புஜாரா, கே.எஸ்.பரத், உமேஷ்யாதவ், ஷர்துல் தாகுர், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவிச்சந்திர அஸ்வின், உனத்கட், மற்றும் ஹர்சல் பட்டேல்,  உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 34-வயதான அஜிங்ய ரெஹானே, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.