சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய ஜோடி தங்கப் பதக்கம் வென்றுள்ளது….

54
Advertisement

அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவு, கடைசி போட்டியில், இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா ஜோடி, தமிர் மற்றும் ஜொரானா ஜோடியை எதிர்கொண்டது. இதில் 16-14 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடி வெற்றிப்பெற்று தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், திவ்யா ஜோடி, மொத்தமாக 581 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.